03 November 2024

Velmurugu Kangasabapathy (Retired Technical Officer) (30.04.2024)

கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

இவர்  

காலஞ்சென்றவர்களான கிராமகோட்டு நீதிபதி சங்கரப்பிள்ளை வேல்முருகு - சீதாதேவி தம்பதியினரின் புதல்வர்

காலஞ்சென்றவர்களான நுளம்பியல் நிபுணர் இராமசாமி மகாதேவா - பாலாம்பிகை தம்பதியினரின் மருமகன்

திலகவதி அவர்களின் கணவர்

காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், மனோன்மணி, இந்திரா ஆகியோரின் சகோதரன் 

 காலஞ்சென்ற பகவதி மற்றும் விஜியறாணி (சட்டத்தரணி - பதில் நீதவான்), கலைமதி (கனடா) ஆகியோரின் மைத்துனர்

Childrens:

நரேந்திரன் (பொறியியலாளர்-லண்டன்)

கௌரி (கனடா)

தர்ஷினி (சட்டத்தரணி - கொழும்பு) 

 

Son/Daughter in laws

சறோஜினி (வைத்தியர்-லண்டன்)

சிவகுமார் (கனடா)

ஸ்ரீகணேசராஜா (சட்டத்தரணி-கொழும்பு) 

Grandchildren: 

அபி (லண்டன்)

 செயூரன் (கனடா)

சேயோன் (கனடா)

செந்தாழன் (கனடா)

சாருகேஷன் (கொழும்பு)

சாம்பவி (கொழும்பு) ,




30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில். புகழுடல் தகனம்கோரியடி இந்து மயானத்தில்

22 Juni 2024

சிவகாமசுந்தரி தியாகராஜா (சிவா தியாகராஜா)

சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. 

 

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்  ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில்,  தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர்  என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022  அன்று நாம் இழந்துவிட்டோம்.

தமிழீழ தேசம் விடுதலைக்காகப் போராடுகின்றபோது, பல அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஒரு தாயாக எமது  விடுதலைப்போராட்டத்திற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவராவார்.

நெருக்கடியான இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் போராளிகளுக்கான காப்பரணாகவிருந்து உணவு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுதலைப்போராட்டத்திற்குப் பலம் சேர்த்தவராவார்.

தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்தபோதும், எமது மக்களின் விடுதலைக்காகவும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்பதற்காக தேசிய செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது மட்டுமல்லாது, எமது மாணவர்களின் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்காகக் கல்விக்கழகத்தின் ஊடாகத்  தமிழாலயத்தில் இணைந்து நீண்டகாலம் செயலாற்றிய நல்லாசானாவார்.

மாவீரர்களின் தியாகங்களையும், தாயகமக்களின் விடுதலை அவாவையும் தன்னுள்தாங்கித் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு தேசியப்பணியாற்றிய  இவரை  நாம் இழந்துவிட்டோம். அன்னாரின் இழப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் இவரிடம் கல்விகற்ற மாணவர்களுக்கும் குடும்பத்தினரிற்கும் பேரிழப்பாகும். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சிவகாமசுந்தரி தியாகராஜாஅவர்களின் தேசப்பற்றுமிக்கச் செயற்பாட்டிற்காக ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழத் தாய்த்திரு நாட்டின் எழில்மிகு வளங்களோடும், தாய்மண்ணின் விடுதலை உணர்வோடும் இரண்டறக் கலந்து கிடக்கும் வடமராட்சியின் பருத்தித்துறையில் அவதரித்து, அந்த மகத்தான மண்ணுக்கே உரித்தான கல்வியால், கலையால், வீரத்தால், விடுதலை உணர்வால் மேலோங்கித் திகழ்ந்த ஓர் அற்புதமான அன்னையை இயற்கை இன்று தன்னோடு அணைத்துக்கொண்டுள்ளது. இயற்கையின் நியதியையும் தாண்டிய பெரு வலியோடு பிரிவுத் துயர் சுமந்து நிற்கும் அனைவரோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, தாயாரின் ஆன்மா அமைதி பெறவும் இயற்கையை வேண்டுகின்றோம்.

“ஒரு சிறந்த தாய் ஒரு சிறந்த ஆசிரியை” எனப்படும் தத்துவார்த்த வாக்கியத்திற்கு முழுமையான உதாரணமாகவும், அதன் வழியே வாழ்வின் தடங்களை பொதுவாழ்வின் வரலாறாக்கியும், தமிழ்த்தேசிய இனத்தின் மதிப்புமிகு அடையாளமாக அணியமாக்கப்படுபவர்களில் முதன்மை நிரலில் வாழ்ந்தவருமாக எப்போதும் மதிப்பளிக்கப்படுவார்.

தாய்த்தேசத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக ஒரு இனமானத் தாயாக எத்தகைய அர்ப்பணிப்புக்களை, தியாகங்களை, ஆதரவுகளை நல்க வேண்டுமோ அவற்றிற்கான தாராள மனம் கொண்டு நல்கியது மட்டுமல்லாது, அறம் நெறி தவறாத அந்த விடுதலைப் போரும் சத்திய வேள்வியும் அள்ளிச் சொரிந்த கனதிகளையும், வலிகளையும் சுகமான சுமையாக தாங்கிச் சுமந்த தேச நலன் மிக்க பெருமைமிகு தாயாக பூசிக்கப்படுவார் என்பது திண்ணம்.

தமிழ் மக்களுக்கான ஏக பிரதிநிதிகளாகவும், தமிழீழ தேசத்தின் மீட்பர்களாகவும், காவலர்களாகவும், அரண்களாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளே இருக்க வேண்டும் என்பதிலும், இருப்பார்கள் என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டவராக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் தலைமையினை ஆத்மார்த்தமாக நேசித்து, இயக்கத்தினுடைய ஆரம்ப காலங்கள் தொட்டே தீவிர ஆதரவாளராக செயற்பட்டார் என்பதைக் காலம் மறந்து விடாது.

தானும் தனது துணைவரும் மட்டுமல்லாது,தாம் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் தேசக்காதலையும், அதற்கான தேவைகளையும், தேவைகளுக்கான உழைப்பின் தன்மைகளையும் உணரச் செய்தார். அவற்றிற்கான உதாரணமாக தன்னையே உருவகித்தார். இதன் உச்சமான அடையாளங்களாக,தனது இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாகவும், ஒரு மகனை நாட்டுப்பற்றாளராகவும், பேரனை மாவீரனாகவும் மண்ணுக்காக ஈர்ந்து நெஞ்சப் பசுமையிலே தூக்கிச் சுமந்தார்.

அமைதிப்படையென்ற அழகிய முகமூடியணிந்து உணவுப் பொதிகளோடு எங்கள் தாய்த்தேச மடிமீது காலூன்றிய இந்திய வல்லாதிக்க அரசு, பின்னாட்களில் தனது கோர முகத்தை வெளிப்படுத்தி, தமிழர் தாயகமெங்கிலும் நிகழ்த்திய வரலாற்றுப் படுகொலைகளுக்கும், துரோகங்களுக்கும் எதிராக தமிழீழ தேசமே அணியமாகிப் போர் செய்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகத் திகழ்ந்த கப்டன்:மொறிஸ் (பரதராஜன் தியாகராஜா) என்ற தனது மகன் 01.05.1989ல் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்ததும், தனது மகனின் வித்துடலைப் பெறுவதற்காக ஒரு தாயாக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழீழப் பெண்களின் குறியீடாக இந்தத் தாயார் சந்தித்த சவால்களும், சாதனைகளும் “பெருநினைவின் சிறுதுளிகள்” என்ற இவரது படைப்பான வரலாற்று ஆவணத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ‘ஒப்பறேசன் தவளை ‘ எனப் பெயர் சூட்டப்பட்டு கடலிலும் தரையிலுமாக நிகழ்த்திய பூநகரி இராணுவ முகாம் தகர்ப்புச் சமரிலே இம்ரான் பாண்டியன் படையணியின் போராளியாக களமாடி, 11.11.1993ல் வீரச்சாவை அணைத்துக்கொண்ட கப்டன்: மயூரன் ( பாலசபாபதி தியாகராஜா) என்ற தனது அடுத்த மகனை மாவீரனாகத் தாங்கிக் கொண்டார்.

தீட்சண்யன் என்ற புனைபெயரைத் தாங்கிய இவரது மற்றுமோர் மகன் பிறேமராஜன் தியாகராஜா அவர்கள் மும்மொழித் தேர்ச்சிகொண்ட கல்விப்புல மேன்மைகொண்ட ஆசிரியராக திகழ்ந்ததுடன், 1990ம் ஆண்டு வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலொன்றிலே தனது அவயங்களை இழந்த போதிலும், உறுதியான மன வலிமையோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி, சுகயீனம் காரணமாக 13.05.2000 அன்று சாவைத் தழுவிக்கொண்டார். இவரது அர்ப்பணிப்பு மிக்க செயலாற்றல்களாலும், கலை இலக்கியப் படைப்பாற்றல்களாலும் “நாட்டுப்பற்றாளர்” என்ற மதிப்போடு எல்லோர் நெஞ்சங்களிலும் வாழ்கின்றார்.

தீட்சண்யன் அவர்களது மகனும், சிவகாமசுந்தரி அம்மாவின் பேரனுமான கப்டன்: மயூரன் (பரதன் பிறேமராஜன்) 05.02.2009ல் சிறீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தியாகங்களால் உரமேறிப்போன இந்தத் தாயின் இரண்டு மகள்களும் கலை இலக்கியப் படைப்பாற்றல்கள் ஊடாக, தேச விடுதலை பற்றியும், சமூக விழுமியங்கள் பற்றியும், தேசவளங்கள் பற்றியும் இன்றுவரை கவிதைகளாக, கட்டுரைகளாக வெளிப்படுத்தி வருவதும், அதனை இளந்தலைமுறையினரும், ஆர்வலர்களும் நுகர்ந்து பயன் பெறுவதும் பெரும் பணியாகவே மதிக்கப்படுகின்றது.

தனது இறுதி மூச்சை நிறுத்தி, மீளாத்துயில் கொள்ளும் இந்தத் தாயின் வரலாற்றுப் பக்கங்கள் மிக நீண்டவையும், முக்கியமானவையுமாகும். யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உப அமைப்புகளாகத் திகழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமூடாக, தாயக தேசத்தின் உறவுகளுக்கான ஜீவனோபாய ஆதாரச் செயற்பாடுகளில் தீவிரமாக தொண்டாற்றியவர். தமிழ்க் கல்விக் கழகமூடாக தமிழாலயத்தில் எமது பிள்ளைகளுக்கான தாய்மொழி விருத்தியின் சிறந்த ஆசானாக தன்னை அர்ப்பணித்தவர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மன்கைம் நகரச் செயற்பாட்டாளராகவும் உணர்வோடு சேவையாற்றியவர்.

மதிப்புக்குரிய இந்தத் தாயாரின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்களும், குடும்பத்தின் முழுமையான தியாகங்களும் தமிழ்த்தேசிய இனத்திற்கான வரலாற்றுப் பக்கங்களில் என்றும் உயிர்வாழும் என்பதில் ஐயமில்லை. இவருக்காக எமது தலைகளைச் சாய்த்து இறுதி வணக்கம் செலுத்தும் அதேவேளையில் எமது இனவிடுதலைக்கான பணிகளை இடைவிடாது தொடர்வோமென உறுதி கொள்வோமாக.

Quelle: pathivu.com -


 

திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா (சிவா தியாகராஜா)

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி 

நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா
பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம்.
வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany)

 


மாந்தரின் வாழ்வியலில் மேன்மையாகக் கருதப்படுவது வாழ்வாங்கு வாழ்தலாகும். அதன் உண்மைநிலை யாதெனில் புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்வை மண்ணின் உயர்விற்காகவும், பிறரின் மேன்மைக்காகவும் வாழ்தலேயாகும். அதிலும் பிறந்த மண்ணிற்காக தம்முயிரை ஈய்வது வானுறையும் தெய்வத்தின் நிலையாகும்.அத்தகைய பேறுடைய மக்களை பெற்று தாயகத்திற்காக ஈய்ந்த தியாகத்தாயை இழந்து நிற்கின்றோம்.

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள், பிள்ளைகள் மாவீரர் கப்டன் மொறிஸ்,மாவீரர் கப்டன் மயூரன், மாவீரர் பிரேமராஜன் மாஸ்டர், பேரனான மாவீரர் லெப்டினன். பரதன் பிரேமராஜன், ஆகியோரின் தாயாராகவும், பேத்தியாராகவும் வாழ்ந்து, தேசவிடியலுக்காக தம்மை அர்ப்பணித்த பெருமாட்டியாவார். அத்தோடு தேசத்தில் வாழ்ந்த காலத்தில் வவுனியாவில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இராணுவ நெருக்கடியின் மத்தியிலும், தேசவிரோத அணியினரின் முகாமிற்கு முன் வீட்டில் இருந்து கொண்டு, தமிழீழ புலனாய்வு போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள்ளும் உணவூட்டி பாதுகாத்த வீரத்தாயாவார்.

அத்துடன் தனது போர்க்கால அனுபவங்களின் நினைவுப்பதிவாக ‘பெருநினைவின் சிறுதுளிகள்’என்ற புத்தகத்தை எழுதி தனது எழுத்தாற்றல் மூலம் தேசப்பதிவை பதித்துள்ளார் . புலம்பெயர்ந்து ஜேர்மனிய நாட்டில் தஞ்சம் புகுந்த வேளையில் நம் சிறார்களுக்கு தாய்மொழிக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து மன்கைம் தமிழாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றியதோடு,மன்கைம் நகரத்தில் பிரதிநிதியாவும் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய தேசப்பற்று நிறைந்த உன்னதத் தாயை இழந்து வாடும் பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும்,எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் மண்ணிற்காய் ஆகுதியாக்கி விடைபெறும் எமது தாயவளின் ஆன்மா தேசவிடியலின் கதிர்களோடு சேர தமிழன்னையை வேண்டுகின்றோம்.

தேசவிடுதலையின் வேரில் ஆழ்ந்தோர் தேசவிடியலின் கதிரில் சேர்வர்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 


 

நன்றி: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி

Quelle: குறியீடு - kuriyeedu.com

17 Juni 2024

வல்லிபுரம் கமலநாதன்


வல்லிபுரம்கமலநாதன்.( முன்னாள் பிரதி நகர பிதா. பருத்தித்துறை நகராட்சி மன்றம்) தும்பளையை பிறப்பிடமாகவும், ஆத்தியடியை வதிவிடமாகவும் கொண்வர்.
 

 இவர் 
 காலம் சென்ற வல்லிபுரம், நல்லம்மாவின் கடைசி மகனும்,
 
 காலம் சென்ற பரமநாதன், வள்ளிமுத்துவின் அன்பு மருமகனும்,
 
காலம் சென்ற சிவநாயகியின் ஆருயிர் கணவரும்,
 
லண்டனை வதிவிடமாக கொண்ட இரமச்சந்திரன், காலம் சென்றவர்களான. இராமலிங்கம், மகாதேவன், பாலச்சந்திரன், பரிமேல் அழகன் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரனும்,
 
தயாளனின்(கனடா) அன்பு தந்தையும், 
 
சயந்தினியின் அன்பு மாமனாரும்,
 
புருஷோத், அத்விகாவின் பாசமிகு பேரனும் ஆவார். 
 
இவர் 17-06-2024 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
 
அன்னாரது இறுதி கிரிகைகள் 18-06-2024 காலை 8மணியளவில்ஆத்தியடி இல்லத்தில் நடைபெற்று, சுப்பர் மடம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.


29 Juni 2020

சபாபதிப்பிள்ளை தியாகராஜா (15.09.1934 - 01.12.1997)

M. S. Thiyagarajah
(15.09.1934 - 01.12.1997) 
   

 

தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் கடமையாற்றியவர்.

இவர்
சபாபதிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வன்

சிவகாமசுந்தரியின் அன்புக் கணவர்

ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் மருமகன்

யோகேஸ்வரி குமாரசாமி, தில்லைமுருகராசா, கோகுலராசா (ஜேர்மனி), பரமகுரு ஆகியோரின் சகோதரர்

ஆறுமுகம் குமாரசாமி, சரஸ்வதி பரமகுரு ஆகியோரின் மைத்துனர்

Childrens:
Premarajan - (S. T. Premarjan - பிறேமராஜன்)
Chandravathanaa - (சந்திரவதனா)
Parthiparajan - (பார்த்திபராஜன் - பார்த்திபன்)
Chandrakumary - (சந்திரகுமாரி - சந்திரா இரவீந்திரன்)
Chandrapraba - (சந்திரபிரபா - பிரபா)
Paratharajan - (பரதராஜன் - பரதன் -  மொறிஸ்)
Balasabapathy - (பாலசபாபதி - சபா - மயூரன்)
Kumaraybhama - (பாமா)

Grandchildren: 
Janagan, Khawshikan, Thaksahyini, Parathan
Thileepan, Theepa, Thumilan
Morris, Krishnarathai
Tharaniyan, Rishiyan, Tharschiya
Bahinthusha, Mayuran, Sivagami
Sayandan, Sayani, Sankeedan

28 Juni 2020

VELMURUGU ­ SEETHADEVI

VELMURUGU ­ SEETHADEVI    

wife of late D.S. Velmurugu of Arthiady Point Pedro 

loving mother of Kamaladevi, Susiladevi, Mathivanar 

mother­in­law of Dr Thigarajah, Ramachandran, Ranjini. 

Cortege leaves  Barney Raymond Funeral Parlour for Cremation at 2.00 p.m. Saturday 03rd May General Cemetery, Kanatte. (03.05.2003)

 

 

VELMURUGU ­ SEETHADEVI   Wife of late Dr S.Velmurugu of Arthiady Point Pedro, loving father of Kamaladevi Susiladevi Mathivanar, father­in­law of Dr. Thiagarajah Ramachandran Ranjini. Cortege leaves   Barney Raymond Funeral Parlour for Cremation at 3.00 p.m. Saturday 03rd May General Cemetery, Kanatte Borella. 

 Quelle: https://archives.dailynews.lk/2003/05/02/obits.html 

27 Juni 2020

சிதம்பரப்பிள்ளை தவசீலன்

Thavaseelan
மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழ் மருத்துவர் சிதம்பரப்பிள்ளை தவசீலன்

அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் வாழும் மருத்துவர் தவசீலன் (Dr Sithamparapillai Thavaseelan) அவர்கள் தான் பணியாற்றும் மருத்துவத்துறையில் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் Queen’s Birthday 2020 Honours List யில் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை நேற்று முன்தினம் (8 June 2020) பெற்றுள்ளார்.

Dr Seelan qualified from University of Sydney and completed FRACGP. He obtained additional qualifications such as Diploma of Child Health from University of Sydney and Master of Public Health & Tropical Medicine from James Cook University, Queensland. பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

அவரின் சேவைப் பின்னணி இது:
* Bridgeview Medical Practice-இன் நிறுவன இயக்குனர்; GP-ஆக பணியாற்றுகிறார்.
* இலங்கையில் தன்னார்வ மருத்துவராக பலதடவைகள் பணியாற்றியுள்ளார்.
* 2003ம் ஆண்டு முதல் Fellowship Examination-இன் Examiner-ஆக பணியாற்றிவருகிறார்.
* Western Sydney University-இன் மருத்துவத்துறையில் Senior Conjoint Lecturer – மூத்த விரிவுரையாளராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார்.
* மருத்துவர்கள் GP-ஆக மாற பயிற்சி அளிக்கும் மருத்துவராக 2002ம் ஆண்டு முதல் பணியாற்றிவருகிறார்.
* Hartley College பழைய மாணவர்கள் அமைப்பின் தலைவராக 1998முதல் 2002வரை பணியாற்றியுள்ளார்.
* சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் செயலாளராக 1994முதல் 2000வரை பணியாற்றியுள்ளார்.
* Australian Tamil Chamber of Commerce அமைப்பின் 2016ம் ஆண்டுக்கான Lifetime Achievement Award பெற்றவர்.
* • NSW and ACT, Royal Australian College of General Practitioners வழங்கிய Practice of the Year விருதை அவரது நிறுவனம் 2013ம் ஆண்டு பெற்றது.

வழக்கம் போலவே ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத்தன்மையை இந்த வருட Queen’s Birthday விருது பட்டியலும் பிரதிபலிக்கிறது. இதன்படி முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் என சுமார் 738 ஆஸ்திரேலியர்கள் Queen’s Birthday விருது பெறுவோர் பட்டியலில் இடம்பிடித்து அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெறுகிறார்கள். மேலும் 128 பேர் சிறப்பு விருது பெறுகிறார்கள்.

Order of Australia விருதை பெறுபவர்களில் பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட Dr.சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்களும் ஒருவர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

OAM - Seelan
Dr. Thavaseelan on his Queen`s Birthday honour

முருகேசு யோகசம்பந்தர்


Murgesu Yogasampanthar
முருகேசு யோகசம்பந்தர் யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டர். 

இவர்

காலஞ்சென்ற முருகேசு, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், 

காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், யோகசௌந்தரி, யோகராசா மற்றும் யோகரஞ்சிதம், யோகநாதன், காலஞ்சென்ற யோகரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதி, நகுலேஸ்வரன், பகீரதி, இராஜரட்ணம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகிதா- மோகன், அருணன்- ஜோயி(Zoe), யோகாஞ்சலி- குகேசன், யோகாஞ்சனா, யோகினி- ரிச்சி(Richie), யோகானந்தி, பைரவி- சஜந்தன், வித்யாதரன், மயூரி ஆகியோரின் அன்பு இளையப்பாவும் ஆவார்.

அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

22 Juni 2020

Kantha Sithamparapillai

Mrs Kantha Sithamparapillai was born in Singapore to Mr Sivagurunathan and Mrs Manonmani of Thumpalai, Point Pedro. She was the third child amongst nine siblings, comprising 5 girls and 4 boys. She spent her early formative years in Singapore where her father taught Mathematics at the famed Raffles Institution.

Her idyllic life in Singapore was cut short by the advent of the Second World War and the Sivagurunathan family returned to establish new roots in a foreign isle Sri Lanka. Life initially was confusing and alien but they soon settled down. Kantha then married the young and debonair Mr Sithamparapillai of Arthiady in 1952. Theirs was a wedding to remember. The young couple soon settled to a life of domestic bliss. Soon their marriage was blessed with four beautiful children. Sithamparapillai was posted to Colombo to serve in his illustrious career in the Bank of Ceylon. Kantha was then left holding the fort- her husband returning home during weekends – once or twice a month. Their hectic life gradually settled when Sithamparapillai was posted to Jaffna and subsequently retired. Just when they were beginning to settle down, another war erupted – the civil unrest. This affected them badly and they were forced to migrate to Australia.

1988, saw another turning point in Kantha’s life – another big move, another foreign land. But this time supported by the love of her life and her loving children, she set out to make a life for her family and herself. She lived in Perth and Melbourne initially and finally settled down in Sydney in 1994.

Her unduly love will always be cherished by the people she leaves behind:
Beloved husband - Sithamparapillai
Children – Jeyaseelan, Jeyanthi & Thavaseelan
Daughters-in-law – Chandragowry, Shanthini
Grandchildren – Ahilan, Jeevan, Nilesh & Sanjula.

Birth : 7 April 1925
Death: 20 March 2010

18 Juni 2020

பரமு சிதம்பரப்பிள்ளை

Paramu Sithamparapillai
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலுமச்சிநாதிகுளம் மாங்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சிதம்பரப்பிள்ளை அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இராசமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவதாஸ்(இலங்கை), பரமதாஸ்(ஜேர்மனி), சிவகங்கை(கனடா), சிவறஜனி(இங்கிலாந்து), சிவறமணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வானதி(இலங்கை), பரிமளகாந்தி(ஜேர்மனி), விஜயசிறி(கனடா), யோகநாதன்(இங்கிலாந்து), விஜயநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, நாராயணசாமி, இராசம்மா, தங்கம்மா மற்றும் செல்லம்மா(இங்கிலாந்து), இராசமாணிக்கம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளினி, அர்ச்ஜுன், அருண், அனூஜன், மாதுரி, அஜுதன், நிஷாந்தினி, பிரபாகரன், நிருபினி, சுகந்தன், அஜித்தன், அர்விந் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதவ், அஞ்சனா, சுகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பிறப்பு: 12.09.1927
இறப்பு: 15.06.2020

ஆத்தியடி

ஆத்தியடி இலங்கையின் வடபுலத்தில் யாழ் மாவட்டத்தில், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறை, மேலைப்புலோலியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே தம்பசிட்டி கிராமமும், கிழக்கே வினாயகமுதலியார் வீதியும், தெற்கே வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி வீதியும், வடக்கே கோணந்தீவும் அமைந்துள்ளன.

ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை மைல் தொலைவில்தான் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த பனைகளின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், ஹாட்லிக் கல்லூரி வீதியில் தவழ்ந்து கொண்டும் காற்று அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.

* அத்திமரம் ஒன்று இருந்ததினாலேயே அந்த ஊர் அத்தியடி என்ற காரணப்பெயரைப் பெற்று காலப்போக்கில் ஆத்தியடி என மருவியதாகச் சொல்வார்கள்.
* அத்திமரத்தில் பிள்ளையார் போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து அவ்விடத்தில் கல் வைத்து கற்பூரம் கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும் காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும் சொல்வார்கள்.
* ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க கோயில்களில் ஒன்று.
* ஆத்தியடியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், உப அஞ்சல் அலுவலகம், காணி அலுவலகம்.. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய நகரம் என்பது போன்றதான பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.
* இங்கு அரசடி, புதியாக்கணக்கன், வட்டப்பாதி... போன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின் பெயர்களைக் கொண்டே இந்த இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.
* இங்கு வாழ் மக்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாகவும், கல்வியில் மேலோங்கியவர்களாகவும், அரச தொழில்களைச் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். அதே நேரத்தில் புதியாக்கணக்கன், வட்டப்பாதி போன்ற இடங்களில் 1980 ம் ஆண்டுக் காலப்பகுதி வரை எள் ஆட்டும் தொழிலும் குடிசைக் கைத்தொழிலாக இருந்தது. நல்லெண்ணெய் வாங்குவதற்கும், ஆட்டுக்கு பிண்ணாக்கு வாங்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு மக்கள் வந்து போவார்கள்.

இங்குள்ள ஆலயங்கள்
* ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்
* முதலி பேத்தி அம்மன் கோயில்

ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த மாவீரர்கள்
* கப்டன் மொறிஸ்
* கப்டன் மயூரன்

ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த கலைஞர்கள்
* சந்திரா இரவீந்திரன்
* சோ. ராமேஸ்வரன்
* பிறேமராஜன் (தீட்சண்யன்)
* சந்திரவதனா செல்வகுமாரன்

சாதனை படைத்த ஆத்தியடி மக்கள்
* சிதம்பரப்பிள்ளை தவசீலன்

Velmurugu Kangasabapathy (Retired Technical Officer) (30.04.2024)

கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாக க் கொண்டவர். இவர்   காலஞ்செ...