ஆத்தியடி இலங்கையின் வடபுலத்தில் யாழ் மாவட்டத்தில், வடமராட்சிப் பகுதியில்
பருத்தித்துறை, மேலைப்புலோலியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். இதன்
எல்லைகளாக மேற்கே தம்பசிட்டி கிராமமும், கிழக்கே வினாயகமுதலியார் வீதியும்,
தெற்கே வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி வீதியும், வடக்கே கோணந்தீவும்
அமைந்துள்ளன.
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை மைல் தொலைவில்தான்
இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த பனைகளின் இடைவெளிகளின்
ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும்,
ஹாட்லிக் கல்லூரி வீதியில் தவழ்ந்து கொண்டும் காற்று அள்ளி வரும்
ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த
தாலாட்டு.
* அத்திமரம் ஒன்று இருந்ததினாலேயே அந்த ஊர் அத்தியடி என்ற காரணப்பெயரைப் பெற்று காலப்போக்கில் ஆத்தியடி என மருவியதாகச் சொல்வார்கள்.
*
அத்திமரத்தில் பிள்ளையார் போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து
அவ்விடத்தில் கல் வைத்து கற்பூரம் கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும்
காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும்
சொல்வார்கள்.
* ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க கோயில்களில் ஒன்று.
*
ஆத்தியடியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், உப அஞ்சல் அலுவலகம், காணி
அலுவலகம்.. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய நகரம் என்பது போன்றதான
பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.
* இங்கு அரசடி,
புதியாக்கணக்கன், வட்டப்பாதி... போன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின்
பெயர்களைக் கொண்டே இந்த இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.
* இங்கு
வாழ் மக்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாகவும், கல்வியில்
மேலோங்கியவர்களாகவும், அரச தொழில்களைச் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் புதியாக்கணக்கன், வட்டப்பாதி போன்ற இடங்களில் 1980 ம்
ஆண்டுக் காலப்பகுதி வரை எள் ஆட்டும் தொழிலும் குடிசைக் கைத்தொழிலாக
இருந்தது. நல்லெண்ணெய் வாங்குவதற்கும், ஆட்டுக்கு பிண்ணாக்கு
வாங்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு மக்கள் வந்து போவார்கள்.
இங்குள்ள ஆலயங்கள்
* ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்
* முதலி பேத்தி அம்மன் கோயில்
ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த மாவீரர்கள்
* கப்டன் மொறிஸ்
* கப்டன் மயூரன்
ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த கலைஞர்கள்
* சந்திரா இரவீந்திரன்
* சோ. ராமேஸ்வரன்
* பிறேமராஜன் (தீட்சண்யன்)
* சந்திரவதனா செல்வகுமாரன்
சாதனை படைத்த ஆத்தியடி மக்கள்
* சிதம்பரப்பிள்ளை தவசீலன்
18 Juni 2020
Abonnieren
Kommentare zum Post (Atom)
Velmurugu Kangasabapathy (Retired Technical Officer) (30.04.2024)
கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாக க் கொண்டவர். இவர் காலஞ்செ...
-
சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்...
-
கனகசபாபதி ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாக க் கொண்டவர். இவர் காலஞ்செ...
-
வல்லிபுரம்கமலநாதன்.( முன்னாள் பிரதி நகர பிதா. பருத்தித்துறை நகராட்சி மன்றம்) தும்பளையை பிறப்பிடமாகவும், ஆத்தியடியை வதிவிடமாகவும் கொண் ட வர்....
Keine Kommentare:
Kommentar veröffentlichen